Tuesday, 29 November 2016

"நாம என்ன நாட்டாமையா?" -டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!

டிவியில் நடக்கும் 'குடும்பப் பஞ்சாயத்து' ஷோக்கள் குறித்து நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியாவின் கருத்துகள் இணையத்தை பரபரப்பாக்கியுள்ளது.  சன் டிவியில் குஷ்பு நடத்தும் 'நிஜங்கள்' என்கிற டாக் ஷோவில் கலந்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள முயற்சி செய்தனர். இதைத் தடுக்கப் போன குஷ்பு, நடந்த களோபரத்தில் அந்த ஆணின் சட்டையை கொத்தாக பிடித்து விலக்கி விட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

இந்நிலையில் இது போன்ற ஷோக்கள் தொடர்பாக  நடிகை ஸ்ரீப்ரியா தனது முகநூலில் இன்று ஒரு கருத்தை எழுதினார் அது இன்னும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த பேஸ்புக் ஸ்டேட்டஸில் " கணவன் மனைவிக்கும் இடையில் பிரச்னை என்றால் அதை தீர்த்து வைக்க சட்டம் இருக்கிறது. கோர்ட் இருக்கிறது. அதில் கிரிமினல் குற்றங்கள் நடந்தால் தண்டிக்க பலவகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர்கள் தொலைக்காட்சியில் பஞ்சாயத்து செய்வதை பார்க்க சகிக்கவில்லை. நாம் இது போன்றவற்றை விடுத்து நமக்குத் தெரிந்த கலை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம்" என்று எழுதியிருந்தார். இதை அவரின் நட்புப்பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் எழுதிய ஸ்ரீப்ரியா பின்னர் அதன் திரைச்சொட்டை (ஸ்கீரின் ஷாட்) ட்விட்டரில் பகிர்ந்தார்.  

இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் அக்கௌண்டிலும் இதே பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீப்ரியா "அப்படி இது போன்ற ஆதரவற்ற மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமானால் அதை கேமரா இல்லாமல் செய்யலாமே. அவர்களின் பிரச்னை தீர சரியான ஆலோசகரிடமோ அல்லது குடும்பநல ஆலோசகரிடமோ அனுப்பலாமே" என்றும் ட்விட் எழுதினார். 
இதற்கும் பலத்த ஆதரவு இருந்தது. சிலர் எதிர் கருத்தும் எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு பொறுமையாய் பதிலும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது
"எப்ப டீவியை போட்டாலும் எதோ குடும்பத்தின் பிரச்னையும் கண்ணீரும் அடிதடியும்தான் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் தமிழ் சேனல்களை மட்டும் சொல்ல வில்லை. தென்னிந்திய சேனல்கள் அனைத்திலும் இதுதான் இருக்கிறது. இன்னும் சொல்வதானால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அனைவரும் எனக்கு மிக நெருக்கம். இருந்தாலும் என் கருத்தினையும் என் உணர்வினையும் பகிர்ந்துதானே ஆக வேண்டும். திரைத்துறையில் அடிமட்ட தொழிலாளிகளான புரொடக்‌ஷன் உதவியாளரில் தொடங்கி தயாரிப்பாளர், கலைஞர்கள், இயக்குநர்கள் வரை மிகமிக உணர்வு பூர்வமானவர்கள். கண்ணீர் சுரப்பி என்பது நடிகர்களுக்கு மட்டுமல்ல ஆசையுடன் திரைத்துறைக்குள் வந்த அனைவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்யும். நிகழ்ச்சியை நடத்தும் முன்னணி நடிகைகளுக்கு அங்கு பங்கேற்கும் நபர்களின் பின்னணியோ, பிரச்னைகளின் ஆழமோ 100 சதவிகிதம் முழுதாக தெரியப்போவதில்லை.
அப்படியான சூழலில் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே.இன்றைக்கும் சினிமாவில் எவ்வளவோ பேர் சத்தமில்லாமல் உதவி வருகின்றனர். அதே போல தனிப்பட்ட மனிதர்களின் துயரங்களையோ, கஷ்டங்களையோ வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இது போன்ற குடும்பப் பிரச்னைகளில் ஈடுபடுவதை என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் 8-வது வரைதான் படித்துள்ளேன்.
ஒருவர் அவரின் வாழ்க்கை பிரச்னை குறித்து என்னிடம் யோசனை கேட்டாலோ அல்லது அந்த பிரச்னையை சொன்னாலோ என் அனுபவத்தின் அடிப்படையில்தான் என்னால் யோசனை சொல்லமுடியும். அதற்கு என படித்த சட்ட அறிஞர்களோ, குடும்ப நல ஆலோசகர்ளோதான் சரியான ஆலோசனையோ, வழிகாட்டுதலோ செய்ய முடியும். யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சி நடத்தும் அனைவரும் என் நெருங்கிய தோழிகள்தான். இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை"என்று தெரிவித்தார். 
Read more ...

Thursday, 17 November 2016

Saithan – First 5 minutes of the Film – Released Officially

As you await with bated breath to find out who the mysterious ‘Jayalakshmi’ is, watch this video which is the gripping opening scene of Vijay Antony’s ‘Saithan’ . The video will leave you at the edge of your seat and is sure to leave you guessing as to what the demonic ‘Saithan’ would do next.
Read more ...

விஜய்யின் 61வது படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விஜய்யின் 61வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று முன் 'விஜய்61' படத்தின் அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய் 61' படத்தை அனைவரும் எதிர்பார்த்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க அட்லி இயக்குகிறார். இதுகுறித்த 8 வினாடி வீடியோ ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த படத்தின் திரைக்கதை இன்று இறுதி செய்யப்பட்டுவிட்டதால் இன்றைய தினம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளீயாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Read more ...

Tuesday, 1 November 2016

தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரைப்படத் தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் தொடுத்த வழக்கில் அவருக்கு வட்டியுடன் ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டிருந்த நீதிமன்ற தீர்ப்பை அவர் செயல்படுத்தவில்லை. இதனால், தாணுவை நவம்பர் 28-ம் தேதிக்குள் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Read more ...

கமலை பிரிந்தார் கௌதமி !!! என்ன நடந்தது ?????? விவரம் உங்களுக்காக !!!!

சென்னை: கமல் ஹாஸனை பிரிவது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யோசனை செய்து வந்துள்ளார் நடிகை கவுதமி. நடிகை கவுதமி உலக நாயகன் கமல் ஹாஸனை திருமணம் செய்யாமல் அவருடன் கடந்த 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். கமல் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுதமியுடன் சேர்ந்துவிட்டார். இந்நிலையில் கமல் ஹாஸனை பிரிவதாக கவுதமி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். அவர் தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கமல்ஹாஸனும், நானும் பிரிந்துவிட்டோம் என்பதை தெரிவிக்கவே என் இதயம் நொறுங்குகிறது. 13 ஆண்டுகள் சேர்ந்து இருந்த பிறகு இது தான் நான் என் வாழ்க்கையில் எடுத்துள்ள மிகவும் அதிர்ச்சியான முடிவு.

ஒரு உறவில் உள்ளவர்களின் பாதைகள் பிரிந்துவிடும்போது சேர்ந்து இருக்க ஒன்று கனவுகளை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது உண்மையை ஏற்றுக் கொண்டு பிரிய வேண்டும்.

2 ஆண்டுகள் இந்த இதயத்தை நொறுக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ள எனக்கு நீண்ட காலம் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுத்தது. அதன் பிறகே இந்த முடிவுக்கு வந்தேன்.
Image result for kamal gowthami

குற்றச்சாட்டு யார் மீதும் குற்றம் சுமத்துவதோ, என் மீது பரிதாபப்படச் செய்வதோ எனது நோக்கம் அல்ல. வாழ்வில் மாற்றம் இன்றியமையாதது. அனைத்து மாற்றங்களும் நாம் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.

முடிவு இது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு. இந்த முடிவு எனக்கு அத்தியாவசியமானது. நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கும் பொறுப்பு உள்ளது. அதற்கு நான் மனஅமைதியுடன் இருக்க வேண்டும்.

படங்கள் கமலின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அவர் இன்னும் நிறைய சாதிப்பார். அவரை பாராட்ட நான் எதிர்பார்த்து காத்துள்ளேன்.

வாழ்க்கை என் வாழ்க்கை எப்பொழுதும் உங்கள் மத்தியில் தான். அதனால் தான் என் வாழ்க்கையின் இந்த முக்கிய முடிவை உங்களிடம் தெரிவிக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக உங்களின் அன்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. என் வாழ்க்கையின் வலிமிக்க தருணங்களையும் நான் கடந்து செல்ல உதவுவதற்கு நன்றி.

Read more ...

கமலை பிரிய 2 ஆண்டுகளாக யோசனையில் இருந்த கவுதமி !!

Designed By Santhosh.V