Showing posts with label urvashi drinking. Show all posts
Showing posts with label urvashi drinking. Show all posts

Tuesday, 25 October 2016

எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி !!


Image result for urvashi drinking
திருவனந்தபுரம்: எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே எனது முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் தான் என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
ஊர்வசி தனது கணவரும், நடிகருமான மனோஜ் கே ஜெயனை பிரிந்த பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். ஊர்வசிக்கு குடிப்பழக்கம் உள்ளது என்று விவாகரத்தின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது.
என்னை போன்று என் மகளையும் நடிகையாக விட மாட்டேன். அவர் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். (மனோஜ் மற்றும் ஊர்வசிக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
Image result for urvashi drinkingநான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடிகையானேன். நான் விரும்பி நடிக்க வரவில்லை. ஆனால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என ஊர்வசி தெரிவித்துள்ளார்.

ஊர்வசி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படங்கள் தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்

Source : one india.

Read more ...
Designed By Santhosh.V