சிங்கம் 3 சூர்யா-ஹரியின் சிங்கம் 3 படம், டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஒரு பெரிய வெற்றியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் சூர்யாவுக்கு மிக முக்கியமான படம் இது.
ஏன் டிசம்பர்? பொங்கலுக்கு விஜய் நடிக்கும் பைரவா வெளியாகிறது. எனவே அதனுடன் போட்டி போடுவதைத் தவிர்க்கவும் டிசம்பரில் நிறைய விடுமுறை தினங்கள் உள்ளதால் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தப் படங்கள் டிசம்பர் மாதம் வெளியாகின்றன.