Showing posts with label aravindswamy. Show all posts
Showing posts with label aravindswamy. Show all posts

Friday, 21 October 2016

திருட்டுக் கதைக்கு 75 லட்சமா!! #வெட்டவெளிச்சமாகும் போகன் விவகாரம்

சினிமாவுக்கு கதையை எந்த படத்தில இருந்து சுட்டாங்களோ’ என்று கிண்டலாக, ஜோக்ஸில் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.  ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் வெளியாகப்போகிற அடுத்த படம் போகன். தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு ஜெயம்ரவி, அரவிந்த்சாமி இணைய இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கும் இந்தப் படத்தில் நாயகி ஹன்சிகா.
இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று ஆண்டனி தாமஸ் என்பவர் கிளம்பினார். இப்போது தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வெளியான அறிக்கை மூலம் அது வெளிநாட்டுக் கதையின் உல்டா என்று தெரியவந்துள்ளது. 
அந்த அறிக்கை பின்வருமாறு: 
‘எங்களது சங்கத்தின் அசோசியேட் உறுப்பினரான திரு. ஆண்டனி தாமஸ் என்பவர் எங்களிடம் கதை சம்பந்தமான ஒரு பிரச்னையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தைப் பற்றி சில அவதூறுகள் கூறி வருகிறார். இது சம்பந்தமாக விளக்கம் சொல்வதற்காக இந்த அறிக்கையை விடுக்கிறோம்.
திரு. ஆண்டனி தாமஸ் என்பவர் 11.1.2016 அன்றுதான் எங்கள் சங்கத்தில் அசோசியேட் உறுப்பினராக இணைந்தார். 13.1.2016 அன்று (உறுப்பினரான 2-வது நாளே) எங்கள் சங்கத்தில் ‘அல்வா’ என்ற தலைப்பில் ஆறு பக்கங்கள் கொண்ட கதையைப் பதிவு செய்தார். மீண்டும் 27.1.2016 அன்று அதே ‘அல்வா’ என்ற தலைப்பில் சற்று விரிவான அதிக பக்கங்கள் கொண்ட ஒரு கதையை பதிவு செய்தார்.
பின்பு 3.2.2016 அன்று தன் கதையை திரு. லஷ்மண் என்ற கதாசிரியர்-இயக்குநர் (அவரும் எங்கள் சங்க உறுப்பினர்) ‘போகன்’ என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார் என்ற புகாரை சங்கத்தில் பதிவு செய்து தனக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
எழுத்தாளர் சங்க விதிகளின்படி, ஒருவர் உறுப்பினராகி 6 மாதங்கள் கழித்துதான் உறுப்பினரின் புகாரை நாங்கள் விசாரிக்க வேண்டும் . இருந்தாலும் திரு. ஆண்டனி தாமஸ் அவர்களின் சூழ்நிலையைக் கருதி அவர்மீது பரிதாபம் கொண்டு அவரது புகாரை 6 எழுத்தாளர்கள் கொண்ட புகார் விசாரணைக் குழுவிற்கு அனுப்பி உண்மை என்ன என்று விசாரிக்க ஆவன செய்தோம்.
அதன்படி விசாரணைக்குழுவினர் உறுப்பினர் திரு. ஆண்டனி தாமஸ் அவர்களிடமும், உறுப்பினர் திரு.லஷ்மண் அவர்களிடமும் தனித்தனியாக அவரவர் கதைகளை விளக்கமாகக் கேட்டு அறிந்தனர்.
விசாரணைக்குழு விபரமாக விசாரித்தபின்பு, நான்கு நாட்கள் கழித்து தங்களது அறிக்கையை எழுத்தாளர் சங்கத்தில் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் ‘இரண்டு கதைகளுக்கும் சில சில ஒற்றுமைகள் இருப்பதாக தெரிகிறது’ என்று தெரிவித்தனர்.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து புகார் சம்பந்தப்பட்ட முடிவைத் தெரிந்து கொள்ள சங்கத்துக்கு வந்த திரு. ஆண்டனி தாமஸ் அவர்களிடம் இரண்டு கதைகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக புகார் விசாரணைக்குழு தெரிவித்ததாக நாங்கள் தெரிவித்தோம். சங்கத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக திரு. லஷ்மண் அவர்களை விசாரித்து ஒருவேளை இது உங்களின் (திரு.ஆண்டனி தாமஸ் அவர்களின்) கதை என்று நிரூபிக்கப்பட்டால் அதற்கு நிவாரணமாக தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது... திரு. ஆண்டனி தாமஸ் அவர்கள் தனது பெயரை டைட்டிலில் கதாசிரியர் என்று போடவேண்டும் என்றும், மொழிமாற்று உரிமை வேண்டும் என்றும், அதற்கு மேல் கதைக்கு சம்பந்தமாக ரூ.75,00,000/= (ரூபாய் எழுபத்தி ஐந்து லட்சம்) பெற்றுத்தரவேண்டும் என்றும் கேட்டார். அதற்கு நிர்வாகிகள் அனைவரும் கலந்து ஆலோசித்து முதல் இரண்டு கோரிக்கைகளை ஒப்புக்கொண்டதுடன், மூன்றாவது கோரிக்கைக்கு அதிகபட்ச தொகையாக ரூ.10,00,000/= (ரூபாய் பத்து லட்சம்) வரை பேசிப்பார்க்கிறோம் என்று திரு. ஆண்டனி தாமஸ் அவர்களிடம் தெரிவித்தோம். 
அடுத்த 2 நாட்கள் கழித்து திரு. ஆண்டனி தாமஸ் அவர்கள், திரு. லஷ்மண் அவர்கள் இருவரையும் வரவழைத்துப் பேசிப்பார்த்தோம். அப்போது திரு. லஷ்மண் அவர்கள் சில ஆங்கிலப்பட DVDகளை எங்களிடம் கொடுத்து இந்த படங்களையும், மேலும் சில படங்களையும் தழுவித்தான் என் கதையை நான் உருவாக்கினேன் என்று விளக்கமளித்தார். அதில் உள்ள ஆப்பிரிக்கன் படத்தின் மூலக்கதையும், இவர்கள் இருவர் சொன்ன கதையையும் ஒப்பிட்டுப்பார்த்ததில் இருவருமே ஆப்பிரிக்க திரைப்பட கதையை தழுவித்தான் கதை எழுதியுள்ளார்கள் என்பதை அறிந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இருவர் கதைகளிலும் உள்ள காட்சிகள் வேறு சில ஆங்கிலப் படங்களில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டதும் தெளிவானது.

திரு.லஷ்மண் அவர்கள் நான் சங்கத்தில் கொடுத்துள்ள ஆங்கில படங்களின் தாக்கத்தினால்தான் என் கதையை உருவாக்கினேன். அப்பிடியிருக்கும்போது நான் எப்படி ஆண்டனியின் பெயரைப் போட்டு பணம் தரமுடியும் என்று மறுத்தார். இருவரின் விளக்கங்களைக் கேட்டறிந்த செயற்குழுவும் மற்றும் கதைப்புகார் விசாரணைக்குழுவும் கலந்து ஆலோசித்து இரண்டு கதைகளுமே உங்களின் சொந்தக் கற்பனையில் எழுதப்பட்டதல்ல. ஆங்கில படங்களின் தழுவலாக இருப்பதால் எழுத்தாளர்கள் சங்கம் மேற்கொண்டு இதில் தலையிடாது என முடிவு செய்தனர். மேலும் எங்கள் சங்க விதிகளின்படி ஒரு உறுப்பினர் கதையை பதிவு செய்யும்போது “இந்தக் கதை என் சொந்த கற்பனையில் உருவான கதை. வேறு மொழிப்படங்களில் இருந்தோ, நாவல்களில் இருந்தோ தழுவி எடுக்கப்பட்டது அல்ல” என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டுதான் கதை பதிவு செய்பவரிடம் கதையை பதிவு செய்கிறோம். எனவே ஆண்டனி பிறமொழி படத்தின் கதையை தன் சொந்தக்கதை என்று சங்கத்தில் பதிவு செய்தது தவறு! அதனால் சங்க விதிகளின்படி எங்கள் நிர்வாகம் திரு. ஆண்டனி தாமஸ் அவர்களின் புகாரை நிராகரித்தது. திரு.லஷ்மண் அவர்கள் “போகன்” கதையை எங்கள் சங்கத்தில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு பெரும் தொகை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் திரு. ஆண்டனி தாமஸ் அவர்கள் சங்கத்தின் மீதும், சங்கத்தலைவர் திரு. விக்ரமன் மீதும் தொடர்ந்து அவதூறுகளை பல்வேறு ஊடகங்களில் பரப்பி வருகிறார். நாங்கள் சங்க விதிகளின்படியும், நீதியுடனும், நேர்மையுடனும், நியாயத்துடனும் செயல்படுகிறோம்.
இந்த வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் இருப்பதால் தொடந்து நாங்கள் விவாதிப்பதை விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

வழக்காம சமூக ஊடகங்களில் ‘காபிகேட்’ என்று கிண்டலாகப் பேசப்படுவது உண்மைதான் போல என்பது இந்த அறிக்கையின்மூலம் தெரிகிறது என்று சினிமா விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.
Read more ...

Thursday, 20 October 2016

போகன் - கதை சர்ச்சையில் சிக்கியது ?

Bogan directed by Lakshman and produced by Prabhu Deva is all gearing up for a 23rd December release.

Apparently, there is a claim by a cameraman Anthony Thomas, who is a member of the Southern Indian Cinematographers association, that the story of Bogan is his. He has been complaining against the director and producer in police stations and in social media.
Image result for போகன்

Responding to this, director Lakshman had lodged a complaint with Chennai Police Commissioner in which he states that the said Anthony Thomas has been lodging false cases against him and also the producer in various police stations in Chennai which has caused a lot of mental agony for the duo and the team. Lakshman also states that Thomas is doing these things to defame and to extort money from them. He has requested the police to take appropriate action against Anthony Thomas.
Read more ...

Wednesday, 19 October 2016

டிசம்பரில் சிங்கம் 3, போகன், விஜய் சேதுபதி படங்கள் ???

Image result for singam 3 boganபொதுவாக பெரிய படங்கள் பண்டிகை நேரத்தை இலக்கு வைத்து வெளியாகி வசூலை அள்ளுவது வழக்கம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல்தான் மிகப் பெரிய சீஸன். இந்த காலகட்டத்தில் சுமாரான படங்களும் கூட வசூலை அள்ளும். தீபாவளிக்கும் இல்லாமல் பொங்கலுக்கும் இல்லாமல் டிசம்பர் மாதத்திலும் சிலசமயம் பெரிய படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பரில் மூன்று பெரிய படங்கள் வெளியாக உள்ளன
சிங்கம் 3 சூர்யா-ஹரியின் சிங்கம் 3 படம், டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஒரு பெரிய வெற்றியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் சூர்யாவுக்கு மிக முக்கியமான படம் இது.
Image result for bogan jayam ravi
ஏன் டிசம்பர்? பொங்கலுக்கு விஜய் நடிக்கும் பைரவா வெளியாகிறது. எனவே அதனுடன் போட்டி போடுவதைத் தவிர்க்கவும் டிசம்பரில் நிறைய விடுமுறை தினங்கள் உள்ளதால் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தப் படங்கள் டிசம்பர் மாதம் வெளியாகின்றன.
Image result for bhairava vijay

Read more ...
Designed By Santhosh.V