Showing posts with label sivakarthikeyan. Show all posts
Showing posts with label sivakarthikeyan. Show all posts

Thursday, 27 October 2016

ஊர் ஊராகச் சென்று கொடி பிடிக்கும் தனுஷ்... காரணம் சிவகார்த்திகேயனா?

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது. அதே நேரம் தனுஷின் திடீர் பயணம் ஏன் என்கிற விவாதமும் சினிமா வட்டாரத்தில் பலமாக உள்ளது.
தனுஷ் பயணம் ஒரு ரவுண்ட் அப் 
கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்குமுன் தயாரித்த படங்களுக்கான தொகையை விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லை என விநிநோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் “கொடி”க்கு சிக்கல் உண்டாகியுள்ளது. இது இப்படி இருக்க, இதுவரை எந்தப்படத்துக்கும் ஊர் ஊராக சுற்றாத நடிகர் தனுஷ், கொடி படத்தை குடும்பத்தோடு பாருங்கள், என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களிடம் சொல்லி வருகிறார்.
கடந்த மூன்று நாட்களாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளார். குறிப்பாக சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் செம ஹேப்பியாக உள்ளாராம் தனுஷ். தமிழகம் முழுவதும் ஒரே பார்முலாவை பாலோ பண்ணும் தனுஷ், ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு ஒரு பாடலை பாடுகிறார். இந்த ஊரை என்னால மறக்கமுடியாது என கடந்த கால சில நினைவுகளை கூறும் அவர் அடுத்த சிலவார்த்தைகளுடன் கிளம்பிவிடுகிறார்.
"ரெமோ"  "ஷோ" வுக்கு இடையில் தனுஷ் 
சேலத்தில் கொடி படத்தில் இருந்து பாடிய தனுஷ், திருச்சியில் நேற்று காலை எல்.ஏ சினிமாஸ் திரையரங்கத்துக்கு வந்தார். தனுஷ் வருகைக்காக வேலையில்லா பட்டதாரி திரையிடுவதாக இருந்தது. ஆனால் அதெல்லாம் வேண்டாம் என நினைத்த தியேட்டர் நிர்வாகம், கடந்த சில தினங்களாக ஓடிக்கொண்டிருக்கும், ரெமோ படத்தையே ஓட்டினார்கள். தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பை ரசித்துக்கொண்டிருக்க, இயக்குனர் வேல்ராஜ், சுப்ரமணிய சிவா, நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் 'நெருப்புடா' புகழ் அருண் ராஜா சகிதமாக தனுஷ் திரையரங்கத்துக்குள் நுழைந்தபோது ரெமோ நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ரசிகர்களை சந்தித்த தனுஷ், ரசிகர்கள் விருப்பத்துக்கு இணங்க, “டங்காமாரி” பாடலின் சிலவரிகளை பாடினார். அடுத்து ”திருடா திருடி நடித்தபோது, இந்த ஊரில் 35 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது ரசிகர்கள் கொடுத்த ஆதரவை நான் இப்போதும் மறக்கவில்லை” என்றார்.
இப்படி ஊர் ஊராகப் போகும் தனுஷின் வருகைக்காக ரசிகர்கள் காலையில் இருந்தே காத்துகிடக்கிறார்கள். தனுஷ் வருவதற்கு முன் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜிம்பாய்ஸ் 15க்கும் மேற்பட்டவர்கள் கூடவே வருகின்றார்கள். அவர்கள் தனுஷை நெருங்கவே விடுவதில்லை. நெருங்கும் ரசிகர்களை  ரசிகர்கள் மனம் நோகும் அளவுக்குத் திட்டி தீர்க்கிறார்கள். மின்னல் வேகத்தில் வந்து போகும் தனுஷ் வருகைக்காக அந்தந்த மாவட்டத்தில் லட்சக்கணக்காண ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புலம்பி தீர்த்தார்கள். 

திருநெல்வேலி ரசிகர்களுடன் செல்பி 
தமிழகம் முழுவதும் தனுஷை யாரும் நெருங்க முடியவில்லை ஆனால் திருநெல்வேலி தனுஷ் ரசிகர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்பி எடுத்துகொண்டார்கள். அங்கு மேடையேறிய தனுஷ், ”உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பையும், பாசத்தையும் மறக்க முடியவில்லை. அதனால்தான் உங்களை தேடி வந்துள்ளேன். 10ஆண்டுகளுக்கு முன்பு இதே தியேட்டரில் ‘புதுப்பேட்டை’ படம் திரையிட்டபோது வந்தேன். தற்போது வந்து இருக்கிறேன். இனி இந்த அளவு காலதாமதம் ஆகாது. அடிக்கடி உங்களை சந்திக்க வருவேன். கொடி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படத்தை வெற்றி பெற செய்யுங்கள்” என பேசிவிட்டு கிளம்பினார். 
இது குறித்து விசாரித்தபோது, தனுஷின் மாரி படம் கொடுத்த வசூலை அவரது அடுத்த படங்களான தங்கமகன், தொடரி உள்ளிட்டவை தரவில்லை. இந்தப் படங்கள் பின்னடைவை சந்தித்ததால், கொடி படத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தனுஷ் நினைக்கிறார். அதனால்தான் பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் கொடி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதில் ஆர்வமாக இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 450க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீலீஸ் ஆகிறது கொடி. அதிலும் சிக்கல் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார்கள். 

கைக்கொடுக்குமா கொடி
இந்தப் படத்தை இயக்கும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் இயக்கியவர். கொடி படத்தில் முதல்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பாடல்கள் நினைத்தபடி நன்றாக போயிருப்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிலவாரங்களுக்கு முன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுத விசயம் பூதாகரமாகியுள்ளது. இதற்கு காரணம் தனுஷ்தான் காரணம் எனப் பலமான பேச்சு கோடம்பாக்க வட்டாரத்தில் உள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அதிகமாகியுள்ளதால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதற்காக இப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தனுஷ் என்கிறார்கள். 

Sourve : vikatan.
Read more ...

Tuesday, 25 October 2016

Sivakarthikeyan’s next overseas rights sold!

Even before the first schedule, the overseas rights of Sivakarthikeyan’s soon to be kickstarted film with Mohan Raja have been snapped by AP International.
Image result for sivakarthikeyan
Sources say that as both Rajini Murugan and Remo have done remarkable business in overseas territories, AP International has snapped this new film of Sivakarthikeyan for a record price.
The first schedule of the yet-untitled film will commence in Mumbai along with Sivakarthikeyan, Nayanthara, Fahad Faasil and Prakash Raj. The film also has Sneha, RJ Balaji and Yogi Babu in important characters.
Ramji will be taking care of the cinematography for this new action thriller while Anirudh is in charge for music.

Source : Kolly talk
Read more ...

Friday, 21 October 2016

ராங் நம்பர்: சிவகார்த்திகேயன் போன் செய்தால் இணைப்பை துண்டித்த இயக்குனர்கள் ??


இயக்குனர்கள்காமெடி நடிகர் சினிமாவுக்கு வந்தாலும் நகைச்சுவை நடிகராக ஆக வேண்டும் என நினைத்தேன். அல்லது ரஜினி, அஜீத், விஜய்யின் தம்பியாக நடிக்க விரும்பினேன்.

இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குனர்களுக்கு போன் செய்தால் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். இருப்பினும் நான் முயற்சியை கைவிடவில்லை.டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசைப்பட்டு வாழ்க்கையை வீணடிக்காதே என நண்பர்கள் என்னை எச்சரித்தனர். அதற்கு நான், நீங்கள் வாழ்க்கை நடத்த அடுத்தவர்களின் பிராண்டுகளை விற்கும்போது நான் விற்கும் ஒரே பிராண்ட் நான் தான் என பன்ச் வசனம் பேசினேன்


படம்போலீஸ் அதிகாரியின் மகனான சிவகார்த்திகேயன் நன்றாக படித்துள்ளார். ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் சினிமாவுக்கு வந்துவிட்டார். முதலில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து பின்னர் பெரிய திரைக்கு வந்தார்.

சினிமாவில் வாய்ப்பு கேட்டு சிவகார்த்திகேயன் போன் செய்தபோது இயக்குனர்கள் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்களாம்.
படிக்கும் காலத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என விரும்பினேன். அதன் பிறகு விருது விழாவை தொகுத்து வழங்க ஆசைப்பட்டேன்.
விருது விழாவை தொகுத்து வழங்கினால் அங்கு வரும் திரையுலகினர் என்னை பார்த்துவிட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவார்கள் என நினைத்தேன்.
Read more ...

Thursday, 20 October 2016

சிவாவை அடுத்து இப்போது ரெமோ ஆனது ஆனார்


சிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்தான் ரோபோ சங்கர். இவரது இயற்பெயர் சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் ரோபோ போல் நடித்து பெயர் பெற்றதால் இவருடைய பெயரோடு ரோபோவும் இணைந்து கொண்டது. சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர், பெரிய திரைக்கும் அறிமுகமாகி சிறுசிறு வேடங்களில் காமெடியில் கலக்கி வந்தார்.

இந்நிலையில், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நர்ஸ் கெட்டப்புடன் ரோபோ சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான கெட்டப்பா, அல்லது ரெமோ பற்றி ஏதாவது நிகழ்ச்சிக்காக இந்த கெட்டப்பை போட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை. 

இருப்பினும், ரெமோ நர்ஸ் கெட்டப்பில் ரோபோ சங்கரை பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக அவரது புகைப்படத்தை பார்த்த அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Read more ...
Designed By Santhosh.V