சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'சிங்கம் 2' பட ரீலிஸ் எப்போது என்பதுதான் லேட்டஸ்ட் டாக்.
இசை வெளியீடு முடிந்தவுடனே படம் ஜுன் இறுதியில் வெளியிடலாம் என்று யோசனையில் இருந்தார்கள். ஜுன் 28ம் தேதி வெளியாகலாம் என்று பேச்சுகள் நிலவின.
சென்னை, ஹைதராபாத், கொச்சின் என சூர்யா படத்தினை விளம்பரப்படுத்த தவறவில்லை. அதுமட்டுமன்றி படத்திற்கு தெலுங்கிலும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆந்திராவில் ஜுன் 28ம் தேதி படம் கண்டிப்பாக வெளிவருவது சந்தேகம்தான். ஏன் என்றால் ரவி தேஜா, அஞ்சலி, ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கும் 'BALUPU' 28ம் தேதி அன்று தான் வெளியாகிறது.
நேரடி தெலுங்கு படங்களே முன்னுரிமை என்ற சட்டம் இருப்பதால், 'சிங்கம் 2'விற்கு அந்த தேதியில் கணிசமான திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகையால் கேரளா, கர்நாடகாவில் படம் ஜுலை 5ம் தேதி வெளியாக வாய்ப்பிருக்கிறது.
'சிங்கம் 2' படத்தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பட வெளியீடு குறித்த பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜுன் 28, கேரளா, கர்நாடகாவில் ஜுலை 5 என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

No comments:
Post a Comment