Monday, 10 June 2013

தீபாவளிக்கே 'கோச்சடையான்'!

'கோச்சடையான்' படத்தின் முதல் புகைப்படம் வெளியானதில் இருந்து, படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

படத்தின் இடைவேளை வரை டப்பிங் பேசிய ரஜினிகாந்த், இரண்டாம் பாதிக்கு கடந்த 6ம் தேதி டப்பிங் பேசி முடித்தார். இதனை அடுத்து சரத்குமார், ஆதி உள்ளிட்டோரும் படத்தில் தங்களது பகுதிகளுக்கு டப்பிங் பேசி முடித்து இருக்கிறார்கள்.

'கோச்சடையான்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செளந்தர்யா.

முதலாவதாக படத்தின் TEASER, 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்', டிரெய்லர், பாடல்கள் உருவான விதம் என தொடர்ச்சியாக வீடியோ பதிவுகள். 

அதுமட்டுமன்றி,  ’ கோச்சடையான் செல்போன் ‘ என இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பெரிய தொகையை விளம்பரத்திற்கு என்று ஒதுக்கி இருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என்று தீர்மானித்து ரஜினியிடம் கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். ரஜினியோ " ஆகஸ்ட் எல்லாம் வந்தால் நன்றாக இருக்குமா என்று யோசித்து பாருங்கள். தீபாவளி அன்று வெளியிட்டால் நன்றாக இருக்குமே" என்று கூறவே படக்குழு  பொறுத்தது தான் பொறுத்தோம்.. படத்தை ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அளிக்கலாமே என ஆலோசித்து வருகிறது.

பிரம்மாண்டமான விளம்பர யுக்தி என்பது மட்டுமன்றி ரஜினி படம் என்பதால் 'கோச்சடையான்' தீபாவளிக்கு வந்தால் மற்ற படங்களின் கதி என்னவாகும் என்பது சொல்லியா தெரிய வேண்டும்.



No comments:

Post a Comment

Designed By Santhosh.V