ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர், தியாகராஜன் குமாரராஜா. அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்,தனது ஆரண்ய காண்டம் படத்திற்காக , புதுமுக இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். தனது அடுத்தப்படத்தை பற்றி எந்த தகவலையும் வெளியிடாமல் மௌனம் காத்துவந்தார்.
இந்த நிலையில் இன்று அவரின் அடுத்தப்படத்திற்காக அறிவிப்பு வந்துள்ளது. விஜய் சேதுபதியையும் மலையாள நடிகர் பஹத் பாசிலையும் நாயகர்களாக வைத்து தனது அடுத்தப்படத்தை இயக்குகிறார் தியாகராஜன் குமாரராஜா.
source : vikatan
No comments:
Post a Comment