Monday, 31 October 2016

இயக்குனர் சீனு ராமசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 4 பக்க கடிதம்

இயக்குனர் சீனு ராமசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 4 பக்கத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அது எதற்காக? அந்த கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளது? என்பதை கீழே பார்ப்போம்.

விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த படம் ‘தர்மதுரை’. இப்படம் இன்றும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் ‘தர்மதுரை’ படத்தை பார்த்த திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இப்படத்தில் தனக்கு பிடித்த காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் 4 பக்க கடிதமாக எழுதி இயக்குனர் சீனு ராமசாமிக்கு அனுப்பியுள்ளார்.



அதில், இதுவரை சமூக நோக்கம் கொண்ட படங்களை எடுத்து வந்த சீனு ராமசாமி, ‘தர்மதுரை’யிலும் பல சமூக மாற்றங்களை வலியுறுத்துகின்ற வகையில் படத்தை உருவாக்கியுள்ளார். காதலில் தோற்றுப்போன ஒரு ஆணும், திருமண வாழ்வில் தோற்றுப் போய், விவாகரத்தான ஒரு பெண்ணும், புதிதாக இணைந்து வாழும் வாழ்க்கை முறையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இப்படத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார் ஸ்டாலின்.

மேலும், கதை, திரைக்கதை, பாட்டு, நடிப்பு, இசை, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் தனக்கு பிடித்திருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சீனு ராமசாமியின் திரைப்பட பணிகள் மேலும் வளரவும், அவர் மென்மேலும் சமூக சீர்திருத்த படங்கள் தரவேண்டும் என்றும் வாழ்த்துக் கூறியுள்ளார்.
 
சினிமாவுக்கு அப்பாற்பட்டு அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்த்து ‘தர்மதுரை’ படக்குழுவினரை உணர்ச்சி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே, இப்படத்தை பாமக தலைவர் ராம்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பார்த்து பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  



No comments:

Post a Comment

Designed By Santhosh.V