டான்ஸ்மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நடிகராகி, இயக்குனர் ஆனவர் பிரபுதேவா. தமிழில் விஜய் நடித்த ‘போக்கிரி’ ‘வில்லு’ விஷால் நடித்த ‘வெடி’ ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ படங்களை இயக்கினார். பின்னர் இந்திக்கு சென்ற பிரபுதேவா பிரபல இயக்குனராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் தமன்னாவுடன் நடித்த ‘தேவி’ படம் தமிழ்,தெலுங்கு, இந்தியில் வெளியாகிஉள்ளது.
இந்த நிலையில் 5 வருடங்களுக்குப்பிறகு பிரபுதேவா மீண்டும் தமிழ் படம் ஒன்றை இயக்குகிறார்.
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில், விஷால் கருப்பு ராஜாவாகவும், கார்த்தி வெள்ளை ராஜாவாகவும் இணைந்து நடிக்கிறார்கள். இதில் ஒரு நாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியை தேடி வருகிறார்கள். ஐசரிகணேஷ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Source - Maalai malar.
No comments:
Post a Comment