தான் இசை அமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் அவ்வப்போது தோன்றி தன் நடிப்பு ஆசையைக் காட்டி வந்த யுவன் சங்கர் ராஜா, இப்போது முதல் முறையாக முழு நீள ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிப்பதற்கு வசதியாக, தான் இசையமைக்கும் படங்களுக்கு மூன்று மாதங்கள் தள்ளி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். மேலும், இந்தப் படம் நன்றாக ஓடினால் மட்டுமே தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன் என்றும் அவர் முன்னெச்சரிக்கையாகக் கூறியுள்ளார். இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸின் எஸ் மதன். ஏற்கெனவே சில இசை வீடியோக்களிலும் யுவன் நடித்திருக்கிறார். ஹீரோவாக நடிப்பதால் நடனம், உடற்பயிற்சி என மிகத் தீவிரமாக உள்ளாராம்.
No comments:
Post a Comment