கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது. மொத்தம் 7 சி.பி.ஐ., அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஹம்மர் காரை மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்.
உலகின் மிக விலையுயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக கருதப்படும் ஹம்மர் இந்தியாவில் கிரிக்கெட் வீரர் டோணி, ஹர்பஜன்சிங் மற்றும் சினிமா பிரபலங்களிடமும், பெரும் தொழிலதிபர்களிடமும் உள்ளது. ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவி கார் தவிர பல கார்களை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினிடம் இருக்கும் ஹம்மர் கார் அமெரிக்க தயாரிப்பு. ஜெனரல் மோட்டார்ஸ் அங்கமான ஹம்மர் பிராண்டு எஸ்யூவி கார்கள் முதலில், ராணுவ வாகனமாக பயன்படுத்தப்பட்டு பின்னர் சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும் மாடலாக விற்பனை செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பிரச்னை காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெனரல் மோட்டார்ஸ் இந்த கார் உற்பத்தி 2010ம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது.
No comments:
Post a Comment